இன்று ஆவணி அவிட்டம்.. பூணூல் என்கிற முப்பூரிநூலை மாற்றிக்கொள்ளும் சடங்கு

by Admin / 19-08-2024 10:53:11am
இன்று ஆவணி அவிட்டம்.. பூணூல் என்கிற முப்பூரிநூலை மாற்றிக்கொள்ளும் சடங்கு

இன்று ஆவணி அவிட்டம்.. பூணூல் என்கிற முப்பூரிநூலை மாற்றிக்கொள்ளும் சடங்கு. பிராமணர்களும் விஸ்வ பிராமணர்கள் என்று அழைக்கக் கூடிய ஆச்சாரிகளும் [ ஆசாரியார்]அணிந்து கொள்ளும் பூணூலை வருடம் தோறும் மாற்றிக் கொள்ளும் நிகழ்வுதான் ஆவணி அவிட்டம். இறை சார்ந்த தொழில் செய்யும் சமூகம் ஐதீகப்படி அணிந்து தம் பணிகளை மேற்கொண்டு வருவதன் பொருட்டு அணிந்து இருக்கும் பூணூலை மாற்றிக்கொள்ள இது உகந்த காலம் என்பதால் வருடம் தோறும் இதை ஒரு சடங்காக வைத்து... மாற்றிக்கொண்டு வருகிறார்கள். இந்நிகழ்வு இன்று அதிகாலை நாலு 32 முதல் 5 20 வரை பிரம்ம முகூர்த்த காலத்தில் மாற்றக் கூடியதாகவும் இல்லை எனில் மதியம்12 முதல் ஒரு மணி வரை மாற்றிக் கொள்ளக்கூடிய காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது யசூர் வேதத்தைப் பின்பற்றுபவா்கள் மேற்கொள்ளும்காலம்.

 

 

Tags :

Share via

More stories

Logo