தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு தடை

by Admin / 02-09-2026 02:44:04am
தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு தடை

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு செப்டம்பர் ஒன்றிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் செல்போன்களை நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தின் ஐந்து ரூபாய் கட்டணத்தோடு பாதுகாக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது m செல்போன்களை பெற்றுக் கொள்ளும்போது ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை அமைப்பு மூலமாக முறையான டோக்கன் அல்லது ரசீது வழங்கப்படும் என்றும் சில முக்கிய கோவில்களில் பக்தர்களின் முகம் மற்றும் செல்போன் விவரங்களை ஸ்கேன் செய்யும் நவீன தொழில்நுட்பம் மூலமும் இந்த பாதுகாப்பு வசதியை இந்த அறநிலைத்துறை செய்துள்ளது கேமரா வசதி இல்லாத சாதாரண மொபைல் ஃபோன்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தடை விதிக்கப்பட்டுள்ள 52 கோயில்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளடக்கிய 52 கோயில்களில் செல்போன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துரை மீனாட்சி அம்மன் கோவில் திருச்செந்தூர் முருகன் கோவில் ராமேஸ்வரம் கோவில்களில் ஏற்கனவே செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo