காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் தாலி அறுப்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை

by Editor / 14-03-2025 04:31:42pm
காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் தாலி அறுப்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பூஜா என்ற பெண் சரண்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், பூஜாவிற்கு முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக அவரது உறவினர்கள் சரண்ராஜ் வீட்டிலிருந்து அழைத்து வந்துள்ளனர். திருவண்ணாமலையிலுள்ள கோவிலில் வைத்து பூஜாவின் கழுத்திலிருந்த தாலியை அறுத்து அவரை அடித்து காரில் தூக்கிச் சென்றுள்ளனர். இதையடுத்து, பூஜா மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 

Tags :

Share via