இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் முதல்வர்

by Editor / 27-06-2021 03:57:54pm
இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் முதல்வர்

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மருத்துவரான ஐஸ்வர்யா, புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித்தைத் (29) திருமணம் செய்துள்ளார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித் ஆவார்.

ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் இத்திருமணத்தில் கலந்துகொண்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via