மகாபலி மன்னன் மக்களைக் காண வரும் அந்த நன்னாளே கேரளாவில் ஓணம் பண்டிகை
அசுரர் குலத்தைச் சேர்ந்த பிரகலாதனின் பேரன் மற்றும் விரோசனனின் மகன். மூன்று உலகங்களானபூலோகம், புவலோகம், ஸ்வர்கலோகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மிகச்சிறப்பாக ஆட்சி செய்தார். கொடைவள்ளல், தர்மவான் மற்றும் சிறந்த விஷ்ணு பக்தர்: அவரது பேராற்றலால் இந்திரன் தன் பதவியை இழந்து, தேவர்கள் அஞ்சினர். மகாபலியின் ஆணவத்தை அடக்கி, தேவர்களின் உலகை மீட்க விஷ்ணு எடுத்த 5-வது அவதாரம். மிகச்சிறிய உருவம் கொண்ட ஒரு பிரம்மச்சாரிகுள்ள வடிவம்.மகாபலி மன்னன் அஸ்வமேத யாகம் செய்யும்போது வாமனர் அங்கு சென்றார்.தன்னிடம் தானம் கேட்க வந்த வாமனரிடம் என்ன வேண்டும் என்று மகாபலி கேட்டார். வாமனர் தனது காலடியால் மூன்று அடி நிலம் மட்டுமே கேட்டார். வந்திருப்பது விஷ்ணு என்பதை உணர்ந்த அசுர குரு சுக்கிராச்சாரியார் தானம் கொடுக்க வேண்டாம் என தடுத்தார். ஆனால், கொடுத்த வாக்கை மீற மாட்டேன் என்று கூறி மகாபலி தானம் கொடுக்க சம்மதித்தார். வாமனர் திரிவிக்ரமனாக பிரம்மாண்டவிஸ்வரூபம் எடுத்து பூமியை அளந்தார்.இரண்டாம் அடி: அடுத்த அடியால்விண்ணுலகை அளந்தார்.மூன்றாம் அடி: மூன்றாவது அடிக்கு இடம் இல்லாததால், மகாபலி தன் தலையை குனிந்து தந்தார்.முடிவு: விஷ்ணு அவரது தலையில் பாதம் தூக்கி வைத்து, அவரை பாதாள உலகிற்கு அனுப்பினார். மகாபலியின் கொடையால் மகிழ்ந்த விஷ்ணு, அவருக்கு பாதாள உலக அரசனாகும் பதவியை தந்தார். தன் நாட்டு மக்களை ஆண்டுக்கு ஒருமுறை வந்து பார்க்க மகாபலிக்கு விஷ்ணு வரம் அளித்தார். மகாபலி மன்னன் மக்களைக் காண வரும் அந்த நன்னாளே கேரளாவில் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
Tags :


















