தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை

by Staff / 05-05-2022 01:49:17pm
தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை

 வெல்டிங் மிஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தில் தொலைத்துவிட்டு சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய தோடு போலீசில் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி விட்டு சென்ற மர்மநபர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பெருமாள் கோயில் மேடு பகுதியில் லட்சுமி விலாஸ் வங்கி சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்துள்ளது ஏடிஎம் மையத்தில் பாதுகாப்புக்கு காவலாளி இல்லாத நிலையில் நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் வெல்டிங் மிஷின் மூலம் துளையிட்டு பணம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியோடு பணத்தை திருடிச் சென்றுள்ளனர். முன்னதாக ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா க்கான இணைப்பு மற்றும் அழகான இணைப்பை துண்டித்த மர்ம நபர்கள் அந்த அலாரத்தை கையோடு எடுத்துச் சென்றுள்ளனர். அதோடு மோப்பநாய் கண்டறிய முடியாத வகையில் ஏடிஎம் மையம் முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்ற மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பணம் இருந்த பெட்டியை தூக்கி போட்டு விட்டு பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பியோடியிருக்கார்.

 

Tags :

Share via

More stories