மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்மீது வழக்கு.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்குளம் பகுதியில் முள்ளம்பன்றி வேட்டையாடியதாக கூறி நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்கள் பெருமாள்பிள்ளை, சுப்பிரமணியம், இளமுருகு மார்த்தாண்டன் மற்றும் தடிக்காரன்கோணத்தை சேர்ந்த ஜோஸ், ஜான்பெர்லின் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில்.ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கறிஞர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற இருவர் சிறையில் அடக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டுதுப்பாக்கி, டூவீலர், கார், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.3 வழக்கறிஞர்கள் மீது வழக்குபதிவு செய்து வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் வனத்துறையினர் பொய் வழக்கு போட்டதாக கூறி 60 வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் மீது கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags :