ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்

by Staff / 14-03-2023 12:01:49pm
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்

உலக அளவில் ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், 2013-17ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆயுத இறக்குமதியுடன் ஒப்பிடும்போது 2018-22இல் 11% குறைந்துள்ளது. பாதுகாப்பு கொள்முதல் செயல்முறையில் உள்ள சிக்கலான தன்மை மற்றும் உள்நாட்டு வடிவமைப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது போன்றவையே இதற்குக் காரணம். சிப்ரி (SIPRI) அறிக்கையின்படி, இந்தியா, சவுதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகியவை முறையே 2018-22 இல் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளாக இருந்தன. அமெரிக்கா தொடர்ந்து ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.

 

Tags :

Share via