கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளது அமைச்சர் கோவி.செழியன்

கல்வி, சமூக நீதி உள்ளடக்கிய வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் மாநில உரிமையை பறிக்கும் யுஜிசி திருத்தங்களுக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், "யுஜிசியின் வழிகாட்டுதல்கள் மூலம் தேசிய கல்விக் கொள்கையை திணிக்க முயற்சி நடைபெறுகிறது. நிதி உதவியின்றி கல்வி முறையில் விதிகளை திணிப்பது நியாயமற்றது" என்றார்.
Tags :