6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 28-05-2023 04:45:02pm
6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo