திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றுள்ளார். யுஜிசி விதிமுறைகளை திரும்பப்பெறக்கோரி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவும் பங்கேற்றுள்ளார். இதில் பேசிய அகிலேஷ், இப்போராட்டம் அனைத்து மாணவர்களுக்குமானது என்றார். இதில் தமிழக எம்பிக்கள் கனிமொழி, வைகோ, திருச்சி சிவா, துரை வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
Tags :