எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்த அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அங்கு 18,000 சட்டவிரோத இந்தியக் குடியேறிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 104 இந்தியர்களை அமெரிக்கா நேற்று (பிப். 05) திருப்பி அனுப்பியது. இந்நிலையில் கைவிலங்கிட்டு அவர்களை அமெரிக்கா அனுப்பி வைத்ததாக கூறி நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 06) அமளி ஏற்பட்டதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
Tags :