அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

by Staff / 06-02-2025 01:34:55pm
அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் படம் காலை 9 மணிக்கு ரிலீசான நிலையில் ரசிகர்கள் நேற்று இரவு முதலே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை சோலைமலை தியேட்டரில் விடாமுயற்சியை காண வந்த ரசிகர்கள் தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு இருந்த போலீசார் ரசிகர்களை அடித்து விரட்டினர்.

 

Tags :

Share via