பாதுகாப்புடன் இருக்கிறோம் வதந்தியை நம்பவில்லை..என்ற வாசக பதாகையுடன் திரண்ட வடமாநிலத்தினர்
திருப்பூர் போயம்பாளையம் அருகே எந்தவித பயமு மின்றி பாதுகாப்புடன் இருக்கிறோம் என்ற வாசகத்து டன் கூடிய பதாகையுடன் வடமாநில தொழிலாளர்கள் திரண்டனர். மேலும் வதந்தியை நம்பவில்லை என்றும் கூறி உற்சாகமாக காணப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளில் ர், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேஷ், ராஜஸ்தான் பீகார், உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூருக்கு குடும்பத்துடன் வந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இங்கு கைநிறைய சம்பாதிப்பதால் திருப்பூரை சொர்க்க பூமியாக நினைத்து மகிழ்ச்சியுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமா நில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற ஒரு வீடியோ போலியாக சமூக வலைதளங்களில் பரவியது. இது திருப்பூர் மட்டுமின்றி, பீகார் சட்டமன்றம் வரை எதிரொலித்தது.
இதன் எதிரொலியாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 அதிகாரிகள் குழுவினர் இங்கு வந்து ஆய்வு செய்தனர். இதையடுத்து தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக வலைதளங்களில் பரவியவீடியோ மற்றும் தகவல் போலியானது என்றும், வதந் தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெளிவுப்ப டுத்தி வருகின்றனர். போலீசார் சார்பில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றும் பகுதிக ளுக்கு சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி போயம்பாளை யம் கங்காநகர் பகுதியில் 8-வது வார்டு கவுன்சிலர் வேலம்மாள் காந்தி ஏற்பாட்டில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையில் போலீ சார் நேற்று தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்ப டுத்துவதற்காக சென்றனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர் கள் அங்கு திரண்டனர். பிரச்சினை இல்லை அவர்கள் அனைவரும் எங்களுக்கு இந்த பகுதியில் எந்த பிரச்சினையும் இல்லை, அச்சுறுத்தலும் இல்லை, ஒற்றுமையாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரி வித்தனர். நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம். வதந்தி களை நம்ப மாட்டோம். உண்மையை தெரிந்து கொண் டோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி யபடி உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
பிரச்சினை இருந்தால் உடனடியாக காவல் கட்டுப் பாட்டு அறை எண் 100 மற்றும் மாவட்ட நிர்வாகம் அறி வித்துள்ள 9498101300 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார், அதிகாரிகள் கூறினார்
Tags :