பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் சம்பவ இடத்தில் விசாரணை.

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் கடந்த 11-ம் தேதி எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, உயிரிழந்த பெண் சிவகாசி பகுதியை சேர்ந்த கமலி என்பதும், அவரை அவரது காதல் கணவரான ஜான்கில்பட் அடித்து கொலை செய்து தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் கொண்டு வந்து எரித்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் உள்ளிட்ட இருவரையும் கைது செய்த போலீசார் இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் தற்போது இலத்தூர் பகுதியில் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அவருடன் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் உடன் உள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக ரவிவர்மன் தற்போது காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து, இது தொடர்பான விசாரணை அறிக்கை அரசிற்கு அனுப்பி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் சம்பவ இடத்தில் விசாரணை.