‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே பாடல் புகழ் திருச்சி லோகநாதன் 

by Editor / 24-07-2021 05:53:46pm
‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே பாடல் புகழ் திருச்சி லோகநாதன் 


(ஜூலை 24 பிறந்த நாள் )

திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும்.
நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.


 திருச்சி லோகநாதன். தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர். அப்போதெல்லாம் நடித்தவர்களே பாடினார்கள்.‘வாராய்’ பாடலைக்கேட்க மலைகளும் ‘உலவும் தென்றல்’ பாட்டைக் கேட்க ஓடங்களும் ‘ஆசையே அலை போல’ பாடலின் குரலைக் கேட்க அலை மோதும் ரசிகர்கள் ஏராளம்.


‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, தங்கச்சிக் கண்ணே’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடல்தான், அன்றைக்குக் கல்யாண வீடுகளில் ஒலிபரப்பாகும். தங்கையே இல்லாதவர்கள் கூட, இந்தப் பாடலை எப்போதும் முணுமுணுத்தார்கள். அப்போது, செல்போன் இருந்திருந்தால், ‘ஆசையே அலைபோல’, ‘வாராய் நீ வாராய்’, என்கிற பாட்டையெல்லாம் ரிங் டோனாகவும் காலர் டியூனாகவும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.


‘உலவும் தென்றல் காற்றினிலே’ என்ற பாடல். அதில், ‘களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்’ என்று பாடும் போது, நம்மையும் உலாவவிட்டு கூட்டி வருவார். அப்படியொரு குலோப்ஜாமூன் குரல் அவருக்கு..
நடிகர் தங்கவேலு வீட்டில் நவராத்திரி விழா. மதுரை சோமு பாடினார். அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த திருச்சி லோகநாதன், விறுவிறுவென மதுரை சோமு அருகே சென்றார். ‘பிரமாதம்’ என்று சொல்லி, கையில் இருந்த வெற்றிலைப் பெட்டியை அன்பளிப்பாகக் கொடுத்தார். 

 

Tags :

Share via