உங்களுக்கு வேற என்ன தகுதி இருக்கு.? தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கி.வீரலட்சுமி எச்சரிக்கை.!

by Admin / 23-07-2021 05:50:37pm
உங்களுக்கு வேற என்ன தகுதி இருக்கு.? தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கி.வீரலட்சுமி எச்சரிக்கை.!



ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தனக்குத் தெரியாது என்ற தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு தமிழர் முன்னேற்ற படை கட்சியின் நிறுவனரும், தலைவருமான கி.வீரலட்சுமி  எச்சரிக்கை விடுத்துள்ளார்இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தனக்குத் தெரியாது என்றும், அவர் ஆஸ்கர் வாங்கியதெல்லாம் முக்கியமில்லை என்கிற ரீதியிலும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஒரு பேட்டியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழர் முன்னேற்ற படை கட்சியின் நிறுவனரும், தலைவருமான  கி.வீரலட்சுமி தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அமெரிக்கா தமிழ் சங்கத்தின் தமிழ் ரத்னா விருது வாங்கிய ஏ. ஆர் ரகுமான் என்ற எங்கள் தமிழிசையை அவமதிக்கலாமா தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அவர்களே? நீங்கள் அவமதித்தது ஏ.ஆர் ரகுமான் என்ற தனிநபரை அல்ல. எம்டி. ராமராவ் அவர்களின் மகன் என்ற தகுதியை விட்டால் உங்களுக்கு வேற என்ன தகுதி இருக்குநீங்கள் ஆந்திரா சினிமாத்துறையில் செய்யும் மாயை விதைக்கெல்லாம் போட்டி வைத்தால் எங்கள் தமிழ் மண்ணில் இருக்கும் நடிகர் பவர் ஸ்டாரே உங்களை வென்று விடுவார்.

உங்கள் மண்ணில் நீங்கள் பெண்களை அவமதித்து இருக்கலாம், மூட நம்பிக்கையை விதைத்து இருக்கலாம், ஆனால் எங்கள் அண்ணன் ஏ. ஆர் ரகுமான் அவர்கள் தன் இசையால் பெண்களை கௌரவித்தார்.


நீங்கள் திரையுலகத்தின் நிழல், அவர் நடைமுறை வாழ்க்கையின் நாயகன் மற்றும் சாதனையாளர். எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் மந்திரச்சொல் நாயகன். நீங்கள் அவரை அவமதிக்கவில்லை, நீங்கள் ஆரம்பகாலத்தில் உப்புண்டு வாழ்ந்த தமிழ் மண்ணை அவமதித்து விட்டீர்கள்.நீங்கள் அண்ணன் ஏ. ஆர் ரகுமான் அவர்கள் குறித்துச் சொன்ன கருத்தை திரும்பப் பெற்று மன்னிப்பு கோரவேண்டும். இல்லையென்றால் தமிழகத்திற்கு வரும் உங்கள் மாமனாரின் SRM பேருந்தை சிறைபிடிக்கும் போராட்டத்தை தமிழர் முன்னேற்ற படை முன்னெடுக்கும் " எனக் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via