அம்மாவுக்கு கடைசியாக மெசேஜ் அனுப்பிய ரஷ்ய வீரர் -

by Admin / 01-03-2022 01:56:08pm
அம்மாவுக்கு கடைசியாக மெசேஜ் அனுப்பிய ரஷ்ய வீரர்   -

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்துள்ளது ரஷ்யா. கடந்த வியாழன் முதல் உக்ரைனில் தங்கள் படைகளை முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கிறது ரஷ்ய ராணுவம். 

இந்த போரில் பங்கேற்றிருந்த ரஷ்ய நாட்டு ராணுவ வீரர் ஒருவர் தனது அம்மாவுக்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இதுவே  அவர் இறுதியாக அனுப்பிய  மெசேஜும் கூட. அதற்கு பின்பு அவர் போரில் வீரமரணம் அடைந்துள்ளார். 

அம்மா நான் இப்போது உக்ரைனில் உள்ளேன். இங்கு இந்த நாடே யுத்த பூமியாக மாறி நிற்கிறது. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. 

ஒரே நேரத்தில் அனைத்து நகரங்கள் மீதும் நாங்கள் குண்டுகளை வீசி வருகிறோம். நாங்கள் டார்கெட் செய்பவர்களில் பொதுமக்களும் உள்ளனர், இது மிகவும் வேதனை அளிக்கிறது  

உக்ரைன் மக்கள் எங்களை வரவேற்பார்கள் என முன்னதாக எங்களிடம் சொல்லியிருந்தனர். ஆனால் இங்கு நடப்பது வேறாக உள்ளது. எங்களை தடுக்க அவர்கள் தற்கொலை படைகளாக மாறி வருகின்றனர். 

பெரும்பாலானவர்கள் எங்களை நோக்கி ‘பாசிசவாதிகள்’ என சொல்கின்றனர். மிகவும் கடினமாக உள்ளது. நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன்,என அந்த ராணுவ வீரர் தனது அம்மாவுக்கு கடைசியாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo