மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்று மத்திய இணை அமைச்சர்தெரிவித்ததற்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்

by Admin / 29-07-2026 01:38:00am
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்று மத்திய இணை அமைச்சர்தெரிவித்ததற்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்று மத்திய இணை அமைச்சர் சவுத்ரி தெரிவித்ததற்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்ததோடு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அவர் தம் கடிதத்தில் மத்திய அமைச்சரின் இந்த பதில் தற்போதைய சட்ட நிலைக்கு முரணானது என்றும் இதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதோடு காவிரியின் குறுக்கே கர்நாடக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டில் ஒப்புதலை பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெளிப்படையாக கூறவில்லை என்று அவர் மாநிலங்கள் அவையில் கூறியிருந்த கருத்து தவறானது மற்றும் ஏமாற்றம் அளிப்பது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் உபகாரங்களில் ஏற்கனவே உள்ள சட்டப்படியான தீர்ப்புகள் மற்றும் ஆலமர்டி அணை கேரளாவின் பாம்பார் நீர் மின் திட்டம் ஆகியவற்றில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சு வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாக மத்திய அமைச்சரின் பதில் அமைந்துள்ளது என்றும் தென்னிந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகளின் உயிர்நாடியாகவும் வாழ்வாதாரமாகும் காவிரி நதி விளங்குகிறது என்றும் எனது மேகதாது அணைக்கட்டத்தை வெறும் பொறியியல் திட்டமாக பார்க்க முடியாது என்றும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டில் உரிமைகளை பாதிக்கும் மேகநாதன் திட்டத்திற்கு மத்திய அரசு எந்த விதமான சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாத்து கூட்டாட்சி தத்துவத்தையும் நீதியையும் நிலைநிறுத்த மத்திய அரசு இந்த தவறான நிலைப்பாட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். ஜூன் மாதத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo