செல்போன் லிங்க் மூலமாக அழகிகள் படத்தை அனுப்பி விபச்சாரம்

நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் மேலூர் பகுதியில் கேரளாவை சேர்ந்த இளம்பெண் 2 குழந்தைகளோடு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். அவரது வீட்டுக்கு தினசரி காலை, மாலை கார்களில் இரு சக்கர வாகனங்களில் டிப்டாப் வாலிபர்கள் வந்து நீண்ட நேரம் கழித்து செல்வது வாடிக்கை.இதுகுறித்து ரகசிய தகவல் தனிப்பிரிவுக்கு தகவல் வந்தது. தனிப்பிரிவு போலீசார் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக மறைந்து கண்காணித்து வந்தனர். நேற்று மாலையில் தனிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்ட போது காரிலும், பைக்கிலும் வாலிபர்கள் வந்த வண்ணம் இருந்தது. உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் அதிரடியாக நுழைந்தபோது அந்த வீட்டில் 3 பெண்கள், 2 வாலிபர்கள் அரைகுறை ஆடையோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், பணகுடியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கேரளாவை சேர்ந்த மஞ்சு என்பது தெரியவந்தது. மேலும் 2 பேர் சென்னையை சேர்ந்த அழகிய ஆவார்கள். போலீசார் பாலசுப்ரமணியன், மணிகண்டன், மஞ்சுவை கைது செய்தனர். அழகிகள் இருவரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.விபச்சாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. செல்போனில் தனி லிங் மூலமாக வாலிபர்களுக்கு அழகிகள் படங்களை அனுப்பி கொடுத்து அழகி களுடன் உல்லாசம் அனுப விக்க வைத்துள்ளனர். இதற்காக ரூ. 2000 முதல் ரூ. 4000 வரை பெற்றுள்ள னர். மேலும் ஒரு வாரத்துக்கு ஒரு முறை அழகிகளை மாற்றி உள்ளனர். சென்னை, கேரளா மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த அழகிகளையும் இங்கு வரவழைத்து விபச்சா ரத்தில் ஈடுபடுத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags :