by Staff /
20-09-2023
12:29:15pm
மகளிர் இடஒதுக்கீடு மசோதா-2023 குறித்து மக்களவையில் புதன்கிழமை காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி சிறப்புரையாற்றினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த காலத்தில் தாங்கள் கொண்டு வந்த இந்த மசோதா முடக்கப்பட்டது என்றார். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ராஜீவ் காந்தியின் கனவு. சமையலறை முதல் உலக அரங்கு வரை பெண்களின் பங்கு பெரியது. பெண்களின் தியாகங்கள் எண்ணற்றவை. ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் என்று தெரிவித்தார்.
Tags :
Share via