முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 13 இடங்களில் சோதனை- தங்க நகைகள், ஆவணங்கள் பறிமுதல்

by Editor / 13-09-2022 09:53:51pm
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 13 இடங்களில் சோதனை- தங்க நகைகள், ஆவணங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் 13 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறைசார்பில்  நடத்தப்பட்ட சோதனையில், 16.37 லட்சம் ரூபாய், 1872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னான் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் 2020-ம் ஆண்டில் அமைச்சராக இருந்த போது வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்குவதற்கு அத்தியாவசிய சான்றினை முறைகேடாக வழங்கியது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பத்துறை, சென்னை நகரப்பிரிவு – 5 குந்த எண் 1/2022 சட்டப்பிரிவுகள் 120(B), 420, 468, 471 IPC & 7(a) of the Prevention of Corruption (Amendment) Act, 2018 -ன் கீழ் 12.09.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று 13.09.2022-இல் வழக்கு சம்பந்தமாக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் தவா 1 இடத்திலும் ஆக மொத்தம் 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி சோதனையில் 16.37 லட்சம் ரூபாய், 1872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 ஹார்டிஸ்க்  1 பென்டிரைவ், 2 – ஐ போன்கள் மற்றும் 4 வங்கிலாக்கர் சாவிகள் இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via