பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி -கொல்லம் -தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து.

by Editor / 18-02-2025 10:59:27pm
 பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி -கொல்லம் -தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து.

தென்காசி வழியாக இயக்கப்படும் வண்டி எண்.16791 தூத்துக்குடி - பாலக்காடு சந்திப்பு பாலருவி எக்ஸ்பிரஸ், 19.02.2025 மற்றும் 28.02.2025 அன்று தொடங்கும் பயணம் தூத்துக்குடி மற்றும் கொல்லம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதே போன்று மறுமுனையில் வண்டி எண் 16792 பாலக்காடு சந்திப்பு - தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ், 19.02.2025 மற்றும் 28.02.2025 அன்று தொடங்கும் பயணம் கொல்லம் மற்றும் தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. என தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

Tags : பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி -கொல்லம் -தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து.

Share via