லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவன் பலி

by Staff / 16-02-2023 01:32:48pm
லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவன் பலி

நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேடு அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பக்க டயர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானது.இதில் கல்லூரி மாணவர்கள் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் அரவிந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories