திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை மர்ம மரணம்

by Staff / 02-03-2023 11:34:32am
திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை மர்ம மரணம்

கடலூர் அரியநாச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ்(29). சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 6 மாதத்திற்கு முன்பு இவருக்கும், பவித்ரா(23) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2 மாதத்திற்கு பிறகு ரமேஷ் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றார். இதனிடையே பவித்ரா, ராமகோபாலன்(27) என்பவருடன் சென்றுள்ளார். இதையறிந்த ரமேஷ், ஊருக்கு வந்தார். இதையறிந்த பவித்ரா, தனது தோழிகளுடன், சென்னையில் வேலை தேட சென்றதாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் கடைவீதியில், பவித்ரா, ராமகோபாலனுடன் பேசியுள்ளார். இதைப்பார்த்த ரமேஷ், கண்டித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று அங்குள்ள மரத்தில் ரமேஷ், மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
 

 

Tags :

Share via

More stories