7 மாத குழந்தை உணவு குழாயில் சிக்கிய டாலர் அகற்றம்
குமரி மாவட்டம் மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 7 மாத பெண் குழந்தை நேற்று இரவு தாயின் கம்மலில் தொங்கிக் கொண்டிருந்த டாலரை விழுங்கிவிட்டது. இந்த டாலர் குழந்தையின் உணவு குழாய் மூச்சுக் குழாய் சந்திக்கக்கூடிய இடத்தில் சிக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுவரப்பட்டது. இன்று காலை எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டாலர் அகற்றப்பட்டது.
Tags : 7 மாத குழந்தை உணவு குழாயில் சிக்கிய டாலர் அகற்றம்