ஃபோர்டு நிறுவனத்தை வாங்க டாடா திட்டம்

உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் குஜராத்தில் உள்ள கார் உற்பத்தி ஆலையை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
இதனால் தமிழகத்தில் சுமார் 4500 க்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் இயக்குவதற்கு புதிய வழிமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஃபோர்டு நிறுவனத்தை டாடா வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவ்வாறு இன்னொரு நிறுவனத்திற்கு கை மாறும் போது அதில் இருக்கும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த தகவலை தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
Tags :