காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

by Admin / 23-12-2025 09:57:40am
 காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவில் 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு பதிலாக வளர்ச்சி அடைந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உறுதி இயக்கம் அல்லது விபிஜி ஆர் ஏ எம் ஜி சட்டத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ டிசம்பர் 21 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். முன்பு இருந்த திட்டத்தில்100 நாட்கள் கட்டாய வேலை வாய்ப்பு உறுதி. தற்போது ஒரு நிதியாண்டிற்கு 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. பயிர் விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க ஆண்டுக்கு அதிகபட்சம் 60 நாட்கள் வரை வேலை உறுதித் திட்டத்திற்கு இடைவெளி விடப்படலாம் என்றும் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதிய செலவை முழுமையாக மத்திய அரசு வழங்கியிருந்தது.. ஆனால் ,புதிய சட்டத்தின் படி மத்திய மற்றும் மாநில அரசுகள் 60- 40 என்ற விகிதத்தில் நிதி பொறுப்பை ஏற்கும் என்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் வாராந்திர அடிப்படையில் அல்லது வேலை முடிந்த 15 நாட்களுக்குள் வழங்கப்படுவது இது உறுதி செய்கிறது. இந்த திட்டம் 2047க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும். தீக்ஷிப் பாரத் 2047 இலக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் கிராமப்புறங்களில் நிலையான சொத்துக்கள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories