கோவா உள்ளாட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி
கோவா உள்ளாட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி
கோவா மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 50 இடங்களில் பாஜக 29 இடங்களையும் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா வாடி கோமந்த கட்சி 2 இடங்களையும் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 32 இடங்களை கைப்பற்றி உள்ளது .
காங்கிரஸ் கட்சி 8 முதல் 10 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது .கட்சி மற்றும் புரட்சிகர கோவங்க கட்சி தல ஒரு இடங்களை வென்றுள்ளன . சுயேச்சைகள் நாலு முதல் அஞ்சு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.. டிசம்பர் 20 அன்று நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 70.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.. இந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி 2027-ல் வர இருக்கும் கோவா சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இந்த வெற்றிக்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Tags :


















