137 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

by Admin / 30-12-2025 11:38:29pm
 137 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

கோவையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் சுமார் 11 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூபாய் 137 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் .1700 மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிக் கடன் இணைப்பு ,1700 பொது மக்களுக்கு வீட்டுமனை பட்டா, 211 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர்கள், வாகனம் மற்றும் செவித்திறன் கருவிகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஆணைகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினா.ர் இந்நிகழ்வின் போது ரூபாய் 163 கோடி மதிப்பில் பணி நிறைவு பெற்ற திட்டங்களை திறந்து வைத்து 32 கோடி மதிப்புரான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் தமிழ்நாடு வனப்படை நவீன மயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் விழாவில் 2.50 கோடி மதிப்பிலான துப்பாக்கி மேலான பாதுகாப்பு கருவிகளை காணப்படையினருக்கு வழங்கினார். மேலும் 19.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட வன உயிரின இடமாற்றும் மற்றும் சிகிச்சை மையத்திலையும் ரூபாய் 8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கும்கி யானைகள் பராமரிப்புக்கான சாடியவல் யானைகள் முகாமையும் ரூபாய் 2.60 கோடி மதிப்பிலான வனத்துறை மின்னணு ஆவண காப்பகத்தையும் திறந்து வைத்தார்.

 

 137 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
 

Tags :

Share via

More stories