திருநெல்வேலி சந்திப்பு - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன்வரை நீட்டிப்பு.

by Editor / 18-02-2023 08:47:45am
திருநெல்வேலி சந்திப்பு - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன்வரை நீட்டிப்பு.

திருநெல்வேலி சந்திப்பு - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (தென்காசி மற்றும் ராஜபாளையம் வழியாக)இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது.


1. ரயில் எண். 06030 திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில், 06 ஏப்ரல் 2023 முதல் ஜூன் 29, 2023 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து 19.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 07.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

2. ரயில் எண். 06029 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில், 07 ஏப்ரல் 2023 முதல் ஜூன் 30, 2023 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 19.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 07.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.


நிறுத்தங்கள்: சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி சந்திப்பு, போத்தனுார் சந்திப்பு, கோயம்புத்தூர். 


இந்த ரயிலில் , இரண்டு  ஏசி 3-அடுக்கு பெட்டிகள், ஒன்பது  தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், இரண்டு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு கம் லக்கேஜ்/பிரேக் வேன் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்குமிட வசதி பெட்டி  இணைக்கப்படும்.

 

Tags :

Share via