திருமணமான பெண்கள் அரை கிலோ நகை வைத்துக்கொள்ள அனுமதி

நமது வீட்டில் ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள், ஆண்கள் எவ்வளவு நகைகளை வைத்திருக்கலாம் என வருமானவரித்துறை குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமணமான பெண்கள் 62.5 பவுன் (அரைகிலோ) வரையிலான தங்க நகைகளை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். அதே சமயம் திருமணமாகாத பெண்கள் 31,25 பவுன் (கால்கிலோ)நகைகளை வைத்து கொள்ளலாம். ஆண்கள் 12.5 பவுன் தங்கத்தை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனுமதிகப்பட்ட வரம்பானது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒருவேளை வருமான வரித்துறை அனுமதித்த வரம்புக்கு மேல் நம் வீட்டில் தங்கம் அல்லது தங்க நகைகள் இருந்தால் அவை வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படலாம்.அதற்கான வழிமுறைகளும் வருமான வரித்துறை சட்டத்தில் உள்ளதுஎன தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : Married women are allowed to keep half a kilo of jewellery