ஏரியில் குளிக்கச் சென்ற இரு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருமலை அகரம் கிராமத்தில் நடந்த திருவிழாவுக்காக பாட்டி வீட்டிற்கு சென்ற 17 வயதான முத்துலட்சுமி அவரது சகோதரி சிவசக்தி நேற்று மாலை அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றார் .நீச்சல் தெரியாத இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் இதையடுத்து ஏரியில் மிதந்த இருவரின் சடலத்தை உறவினர்கள் மீட்டனர்.
Tags :