பத்ம விருது பெற்றவர்களுக்கு முதல்வர் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு.

by Editor / 26-01-2024 10:20:30pm
பத்ம விருது பெற்றவர்களுக்கு முதல்வர்  முதல்வர் ஸ்டாலின் பாராட்டு.

பத்ம விருது பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து  முதல்வர் ஸ்டாலின்  தனது X தள பதிவில், பத்ம விபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள கலைஞர்களுக்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன். அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

Tags : முதல்வர் ஸ்டாலின்

Share via
Logo