அன்பு கரங்கள் என்னும் புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர். மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

by Admin / 15-09-2025 03:42:12pm
 அன்பு கரங்கள் என்னும் புதிய திட்டத்தை  தமிழக முதலமைச்சர். மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

சென்னை கலைவாண அரங்கத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை எழுந்து மற்றொரு பெற்றோரால் வளர்க்க இயலாத குழந்தைகளை காலை வணக்கம் பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அன்பு கரங்கள் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனர்களாக தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகள் 18 வயது வரை அதாவது பள்ளி படிப்பு முடியும் வரை தொடர்ந்து கல்வியை பெரும் நோக்கத்தில் மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்ததோடு அன்பு கரங்கள் மற்றும் தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் கே. என். நேரு, ஆர் கே சேகர்பாபு மா சுப்பிரமணியம், சமூக நலத்துறை அமைச்சர்கீதாஜீவன்  ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

Tags :

Share via