அகமதாபாத் விமான விபத்துக்கு விமானி காரணம் அன்று என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது...
அகமதாபாத் விமான விபத்துக்கு விமானி காரணம் அன்று என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது...
.. கடந்த ஜூன் மாதம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் மருத்துவகல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.. இவ் விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் இருந்த 19 பேரும் மொத்தம் 260 பேர் இந்த விபத்தில் இறந்துட்டனர். விபத்திற்கு விமானி சுமித் சவர் வாலா விமான எரிபொருள் சிகிச்சை அணைத்தது விபத்து நிகழ்வதற்கு காரணம் என்றும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து விமான விபத்து புலனாய்வு குழு வெளியிட்ட அறிக்கையில் விமானம் புறப்பட்ட உடனே இரண்டு என்ஜின்களுக்கும் செல்ல வேண்டிய எரிபொருள் நிறுத்தப்பட்டதாகவும் பத்து வினாடிக்கு அப்புறமே ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது..
விபத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது விமான விபத்து புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல் விமானி தான் காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.. இதற்கு விளக்கம் கேட்டு சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது...... இந்நிலையில் மத்திய அரசு விமான விபத்துக்கு விமானி காரணம் அல்ல என்று தெரிவித்தது..
Tags :


















