15 வயது சிறுமியை சீரழித்த சித்தப்பா உட்பட 2 பேர் கைது

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி தனது சித்தி வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது, சிறுமியின் சித்தப்பா ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் பாட்டி ஊருக்கு திருவிழாவிற்கு சென்றபோது திருமணமான 25 வயது இளைஞர் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் 85 வயது முதியவர் ஒருவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி அளித்த புகாரின் பேரில் சித்தப்பா, இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதியவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளர் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :