இலங்கை கடற்படையால் இதுவரை 3,288 தமிழக மீனவர்கள் கைது

by Staff / 12-10-2024 01:08:53pm
இலங்கை கடற்படையால் இதுவரை 3,288 தமிழக மீனவர்கள் கைது

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் பெறப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி 2014ஆம் ஆண்டு முதல் 2024 ஜூலை வரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல், 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 365 படகுகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளது. 21 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via