உதயநிதிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை

காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "உதயநிதிக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவருக்கு தொற்று பாதிப்பு எனவும், அதன் காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
Tags :