"2026-க்கு பிறகு அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்" டிடிவி.தினகரன்
2026-க்கு பிறகு அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டியளித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன், "இரட்டை இலை சின்னம் இருப்பதால் சகித்துக் கொண்டு அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் இபிஎஸ்-ன் சுயநலத்தை புரிந்துக் கொண்டு விரைவில் முடிவெடுப்பார்கள். இல்லையென்றால், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் போய்விடும்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
Tags :