by Staff /
07-07-2023
05:37:43pm
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் உடற்கூறாய்வுக்கு பிறகு அவரது சொந்த ஊரான தேனி ரத்தின நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Tags :
Share via