ஆடை வடிவமைப்பாளர் சாகும் முன் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான முஸ்கன் நரங் (25) தற்கொலை செய்து கொண்டார். உத்தர பிரதேச மாநில மொராதாபாத்திலுள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளாா், அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..
Tags :