காரைக்குடி பிள்ளையார்பட்டி அருகேஅரசு பஸ் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் அருகே அரசு பஸ் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் .காரைக்குடி பிள்ளையார்பட்டி அருகே நடந்த இந்த விபத்தில் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பேருந்து திருப்பூரில் இருந்து காரைக்குடிக்கு சென்ற பேருந்தும் வைரவன்பட்டி சமத்துவபுரம் பகுதியில் மாலை 4 மணி வாக்கில் நேருக்கு நேர் மோதியன. இதில், சம்பவ இடத்திலே 8 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர் 40க்கு மேற்பட்டோ படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு செய்து விபத்திற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தி வருகின்றனர்...
Tags :


















