ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: 44 பேர் 100% மதிப்பெண்
ஜேஇஇ 4-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
ஐஐடி, எம்ஐடி உள்ளிட்ட பொறியியல் உயா்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சோவதற்கு ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் 4 முறை ஜேஇஇ முதன்மை நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாணவர் 4 தேர்வுகளையும் எழுதலாம். அதில் பெறும் அதிகபட்ச மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மூன்றாம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தோவு, கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 4-ம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தோவு, ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் செப்டம்பர 2-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் ஜேஇஇ 4-ம் கட்ட முதன்மை நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும் 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 4 பேர், ராஜஸ்தானில் இருந்து 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
Tags :



















