மாமனாரை கட்டையால் அடித்து கொன்ற மருமகன் கைது.

by Staff / 21-10-2023 01:21:47pm
மாமனாரை கட்டையால் அடித்து கொன்ற மருமகன் கைது.

கும்பகோணம் அருகே தாராசுரம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் தனபால் மகன் வெங்கடேசன் (23). கூலி தொழிலாளி. இவரது மனைவி சௌந்தா்யா. இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வெங்கடேசனுக்கும், சௌந்தா்யாவுக்கும் குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதனால், சௌந்தா்யா சில நாள்களுக்கு முன்பு திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்திலுள்ள தனது பெரியப்பா பாலு வீட்டுக்கு சென்று தங்கினாா். இது தொடா்பாக தாராசுரம் கம்மாளா் தெருவில் வசித்து வந்த மாமனாா் ஆறுமுகம் (52) வீட்டுக்கு வெங்கடேசன் அக்டோபா் 15 ஆம் தேதி இரவு சென்று தகராறு செய்தாா். அப்போது, ஆறுமுகத்தை வெங்கடேசன் கட்டையால் தாக்கினாா். இதனால், பலத்த காயங்களுடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஆறுமுகம் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
 

 

Tags :

Share via