அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்பு கொடுக்கும் சீமான்! யார் இந்த அபிநயா

by Staff / 16-06-2024 04:13:05pm
அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்பு கொடுக்கும் சீமான்! யார் இந்த அபிநயா

தர்மபுரி மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட பெண் மருத்துவர் அபிநயாவுக்கு, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வாய்ப்பு வழங்கியிருக்கிறார் சீமான். தர்மபுரியில் 65,381 வாக்குகள் பெற்ற அபிநயா, டெபாசிட்டை பறிகொடுத்தார். 28 வயதாகும் அவரின் சொந்த ஊர், விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமம். ‘ஹோமியோபதி’ துறையைத் தேர்ந்தெடுத்து, ராசிபுரத்தில் இளங்கலை மருத்துவம் படித்து, மகாராஷ்டிராவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். ‘அடிப்படை அமைப்பு... அரசியல் மாற்றம்’ என்ற சீமானின் கொள்கை முழக்கத்தால் ஈர்க்கப்பட்டு, தேர்தல் அரசியலிலுக்குள் வந்தார்.

 

Tags :

Share via