உயிருடன் மண்ணுக்குள் புதைந்த 2000 பேர்! மீண்டும் ஆபத்து

by Staff / 07-06-2024 04:55:28pm
உயிருடன் மண்ணுக்குள் புதைந்த 2000 பேர்! மீண்டும் ஆபத்து

பப்புவா நியூ கினியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிருடன் புதையுண்டவர்கள் எண்ணிக்கை 2,000-ஐ கடந்தது. இந்த நிலையில் பப்புவா நியூ கினியா அரசாங்கத்திற்கு நியூசிலாந்தின் புவியியல் நிபுணர்கள் குழு அனுப்பியுள்ள ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மட்டுமன்றி அதன் இருபுறமும் நிலத்தின் உறுதித்தன்மை பற்றிய கவலையை எழுப்பியுள்ளனர். இன்னொரு நிலச்சரிவுக்கு அப்பகுதியில் வாய்ப்பிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Tags :

Share via