இன்று அறிவாலயத்தில் மதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை
தமிழக சட்டப்பேரவை முன்னிட்டு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன. நேற்று இந்திய முஸ்லிம் லீக் கட்சி முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது. என்று மனிதநேய மக்கள் கட்சி அதன் தலைவர் எம் எச் ஜவாருல்லா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது கடந்த 2001 தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு வென்ற அந்த கட்சி இந்த முறை ஐந்து தொகுதிகளை கூறியது வரும் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாக ஜவாருல்லா தெரிவித்துள்ளார். மதிமுக தொகுதி பங்கேற்று பேச்சுவார்த்தை குழு என்று அண்ணா அறிவாலயத்தில் தங்களுக்கு வேண்டிய இடங்களை பேசுவதற்காக வந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கமலஹாசனின் மக்கள் நீதி மையத்துடனும் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசினார். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பிப்ரவரி 26 அல்லது 27 தேதிகளில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக பொருளாளர் டி .ஆர் .பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவில் கே.என். நேரு ,இ . வ.வேலு ,திருச்சி சிவா, ஆ .ராசா ,ஆர் .எஸ். பாரதி எம் .ஆர். கே பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















