பாபநாசத்தில் பக்தர்களுக்குத் தடை

by Editor / 01-08-2021 12:32:41pm
பாபநாசத்தில் பக்தர்களுக்குத் தடை

திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை நாள்களில் பாபநாசம் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில்களுக்கு ஆக.1 முதல் ஆக.9 வரை பக்தர்கள் செல்லவும் தாமிரவருணி ஆற்றில் நீராடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து பாபநாசம் செல்லும் சாலையில் டாணா பகுதியிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்கள் யாரும் நடந்தும் கோவிலுக்குச் செல்லவோ, ஆற்றில் நீராடவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில்களில் அன்றாட பூஜைகள் நடத்தப்பட்டன. போலீஸார், ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாபநாசம் வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினரும் அனுமதிக்கவில்லை

 

Tags :

Share via

More stories

Logo