வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல் வீச்சு

by Staff / 09-01-2023 02:12:13pm
வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல் வீச்சு

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கல் வீச்சு நடந்தது. பரோசாய் ரயில் நிலையம் அருகே நடந்த இச்சம்பவத்தால், ரயில் சேவை பாதிக்கப்பட்டு, போல்பூர் ரயில் நிலையத்தில் 10 நிமிடம் ரயில் நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். பிரதமர் மோடி டிச.,30 அன்று ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via

More stories

Logo